சர்வதேச நாணய நிதிய அதிகாரி-ஜனாதிபதி சந்திப்பில், மத்திய வங்கி ஆளுநர் தவிர்க்கப்பட்டார்?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் சர்;வதேச நாணய நிதிய உயரதிகாரி சாங்யோங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தவிர்க்கப்பட்டுள்ளார்.
தொடர்;ந்தும் அவர் சர்வதேச நாணய நிதியத்துக்கு எதிராக தெரிவித்து வரும் கருத்துக்களுக்கு மத்தியில் நேற்று இடம்;பெற்ற இந்த சந்திப்பில் அவர் பங்கேற்கவில்லை.
அவர் தவிர்க்கப்பட்டாரா? அல்லது பங்கேற்கவில்லையா? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லவுள்ளார் என்ற தகவல் வெளியானபோதும், அது கடன்களை மீளமைக்கும் நோக்கத்தை கொண்ட பயணம் அல்ல என்று கப்ரால் தெரிவித்திருந்தார்
இதேவேளை நேற்றைய சந்திப்பில் ஜனாதிபதியுடன், அவரது மூத்த ஆலோசகர் லலித் வீரதுங்க, மேலதிக செயலாளர் சந்திம விக்கிரமசிங்க ஆகியோர் உடனிருந்தனர்



