ரணிலை போன்ற அடிமை வேறு நாடுகளுக்கு கிடைக்கப்போவதில்லை : கஜேந்திரன் எம்.பி
ரணிலை போன்ற அடிமை அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளுக்கு இனி கிடைக்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் நேற்று(04.05.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், மகிந்த தன்னை ஒரு தேசிய வீரனாக காட்டி கொண்டாலும் அவரும் அவர் தலைமையிலான மொட்டும் மிக மோசமான அடிமை நிலையிலே இருக்கிறது.
லட்சக்கணக்கான மக்களை அழித்தீர்கள். இந்த நாட்டை ஆளக்கூடிய ஆற்றல் மிக்க பல்லாயிரம் போராளிகளை நீங்கள் அழித்தீர்கள்.இவ்வாறெல்லாம் அழித்துவிட்டு அனைத்தையுமெ வெளிநாடுகளுக்கு விற்கிறீர்கள் என்று சொன்னால் அது முட்டாள் தனமான காரியம்.
இறைமை பரிபோகின்றது என சொல்லிக்கொண்டு உங்களுடைய முழுவதையும் சீனாவிற்கும், ஏனைய நாடுகளுக்கும் விட்டுக் கொடுக்க போகின்றீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |