இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு 150 மில்லியன் ரூபா பணப்பரிசு
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு 150 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கிய இந்த பணப் பரிசுத் தொகையை இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர்.
ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்கள்
அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிய கிண்ண மகளிர் இருபதுக்கு20 போட்டித் தொடரில் இலங்கை அணி பலம்பொருந்திய இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இறுதிப் போட்டி பரிசளிப்பு நிகழ்வின் போது ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் பணப்பரிசு வழங்குவதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்திருந்தது.
எனினும், தற்பொழுது ஐந்து இலட்சம் அமெரிக்க டொலர்கள் அல்லது 150 மில்லியன் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri