ஆசிய கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கை மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஆசிய கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கை மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
முதல் சுற்றுப் போட்டிகளில் எந்தவொரு தோல்வியையும் சந்திக்காது இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் தாய்லாந்து அணியை பத்து விக்கட்டுகளினால் வீழ்த்தி இலங்கை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
நாணய சுழற்சி
நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய தாய்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 11 ஓவர்கள் மூன்று பந்துகளில் விக்கட் இழப்பின்றி வெற்றி இலக்கினை எட்டியுள்ளது.
இதன்படி, இலங்கை மகளிர் அணி அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாட உள்ளது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
