ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் விஞ்ஞான ஆலோசகராக இலங்கை பெண்
ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரின் விஞ்ஞான ஆலோசனைக்குழுவிற்கு இலங்கையை சேர்ந்த கலாநிதி ஆஷா டி வோஸ் (Asha de Vos) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளரின் அறிவியல் ஆலோசனைக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ள உலகெங்கிலும் உள்ள 7 உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.
விஞ்ஞான ஆலோசனைக்குழு
இந்த குழு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பொதுச்செயலாளர் மற்றும் ஐக்கிய நாடுகளின் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்குவதுடன், நெறிமுறை மற்றும் சமூகப்பிரச்சினைகள் உட்பட சாத்தியமான அபாயங்களை குறைக்க உதவுகின்றது.
இந்த நிலையில், குறித்த பதவியில் அமர்ந்திருக்கும் முதல் இலங்கையர் என்ற வகையில், பொதுச்செயலாளரின் குழுவினர் எவ்வாறு தம்மை கண்டுபிடித்தார்கள் என்பது தமக்கு ஆச்சரியமாக இருப்பதாக ஆஷா டி வோஸ் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |