நாடு பாரிய விளைவுகளை சந்திக்கும்! முக்கிய அமைப்பு விடுத்துள்ள எச்சரிக்கை!
மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடு பாரிய விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என இலங்கை வர்த்தக சம்மேளனம்(சேம்பர் ஒப் கொமர்ஸ்) எச்சரித்துள்ளது.
அலரி மாளிகைக்கு வெளியேயும் காலி முகத்திடலிலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நேற்று நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களால் பீதியடைந்துள்ளதாக சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அரசாங்க எதிர்ப்பு ஆதரவாளர்கள், கடந்த ஒரு மாதகாலமாக அமைதியான போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், அரசாங்க ஆதரவாளர்களால் வன்முறைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தநிலையில் வன்முறைகளுக்கு பொறுப்பானவர்களைக் கண்டறிந்து அவர்களுக்குப் பொறுப்புக்கூறும் வகையில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சம்மேளனம் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால்,அது, நாடு எதிர்கொள்ளும் கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கான தற்போதைய முயற்சிகளை சீர்குலைக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 16 மணி நேரம் முன்
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam