ஆசிய கோப்பை 2023: இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதோடு, ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கும் முன்னேறியுள்ளது.
ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றின் 4வது போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடின.
இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டது.
அதிகபட்சமாக ரோகித் சர்மா 53 ஓட்டங்களும், கேஎல் ராகுல் 39 ஓட்டங்களும் விளாசினர். இலங்கை அணி தரப்பில் வெல்லாலகே 5 விக்கெட்டுகளையும், அசலங்கா 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

எளிய இலக்கு என்றாலும் இந்திய அணியில் 3 ஸ்பின்னர்கள் இருந்ததன் காரணமாக ஆட்டம் லோ ஸ்கோரிங் த்ரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப தொடக்க வீரர் நிஷாங்காவை 6 ஓட்டங்களில் பும்ரா வீழ்த்தினார்.
அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை
அதேபோல் நட்சத்திர வீரர் குசல் மெண்டிஸ் 15 ஓட்டங்களில் மீண்டும் பும்ராவிடம் ஆட்டமிழக்க, தொடர்ந்து சிராஜ் பந்துவீச்சில் கருணரத்னே ஆட்டமிழந்தார். இதனால் இலங்கை அணி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இலங்கை அணி 99 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின் தனஞ்செயா - வெல்லாலகே கூட்டணி இணைந்தது. 7வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 63 ஓட்டங்கள் சேர்த்தனர்.

இலங்கை அணி 171 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இலங்கை அணி வெற்றிபெற 55 பந்துகளுக்கு 43 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய தேவை எழுந்தது.
பின்னர் வந்த ரஜிதா 1 ஓட்டத்தில் ஆட்டமிழக்க இதன் மூலம் இலங்கை அணி 172 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்ளையும் இழந்தது.
இந்திய அணி 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு, ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. அதுமட்டுமல்லாமல் 13 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்ற இலங்கை அணியின் பயணமும் முடிவுக்கு வந்துள்ளது.
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri