முதலீட்டு உதவிக்காக சீனாவை நாடும் இலங்கை: நிபுணர்கள் எச்சரிக்கை
இலங்கை மேலும் முதலீட்டு உதவிக்காக சீனாவை(China) நோக்கி திரும்புவதாக சீன இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் இந்த செயற்பாடானது, இந்தியா(India) மற்றும் அமெரிக்காவுடனான(America) 'வலுவான' உறவுகளை சீர்குலைப்பதற்கான வாய்ப்பாக அமையாது என இணையத்தள செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
கொழும்பு சர்வதேச விமான நிலையம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் ‘சாதகமான பங்களிப்பை’ வழங்குவதற்கும் சீனா உறுதியளித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது வெற்றி பெறும் முதலீடா? அல்லது இலங்கையின் இழப்பில் சீன மூலோபாய நலன்களுடன் இணைந்திருக்குமா? என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா - அமெரிக்கா உறவு
பாரிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதில் சீனாவின் பக்கம் திரும்புவதற்கு இலங்கைக்கு வரையறுக்கப்பட்ட விருப்பங்கள் உள்ளன.
எனினும் இந்த நடவடிக்கை, இலங்கையை கடன் பொறியாக மாறும் அல்லது இந்தியா மற்றும் அமெரிக்காவுடனான அதன் உறவுகளை பாதிக்காது என்று எதிர்பார்க்கப்படுதாக குறித்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த காலங்களில் சீன முதலீடுகள் இலங்கையை "நிதி ரீதியாக மேலும் பாதிப்படையச் செய்ததாக" கூறப்பட்டாலும், வரவிருக்கும் சீன நிதிகள் கடனுக்காக அல்ல, ஆனால் சீன நிறுவனங்களின் பங்கு முதலீட்டின் வடிவத்தில் இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
