அரசியல்வாதிகளின் திட்டத்திற்கு அடிபணிய வேண்டாம்!..தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Sri Lankan Tamils Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sajith Premadasa Election
By Theepan Apr 08, 2024 07:34 PM GMT
Report

வாக்கு பிச்சைக்காக தென்னிலங்கை அரசியல்வாதிகள் படையெடுக்கும் நிலையில், எமது இருப்பினை பலப்படுத்த வடக்கு - கிழக்கு வாழ் மக்கள் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

யாழ் நகரில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், 

“முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னர் இந்த ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளர் தொடர்பாக சிந்திக்கப்பட்டது.

கடன் வழங்குனர்களுக்கு பணத்தை செலுத்த தவறிய இலங்கை அரசு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

கடன் வழங்குனர்களுக்கு பணத்தை செலுத்த தவறிய இலங்கை அரசு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

தமிழர்களின் மறதி

எனினும், அது தொடர்பாக பெரிதாக கடந்த தேர்தல்களில் பேசப்படாவிட்டாலும் இம்முறை பொது வேட்பாளர் குறித்து கவனம் செலுத்தப்படுகின்றது.

பொது வேட்பாளர் இல்லாத பட்சத்தில் பல மக்கள் இம்முறை வாக்களிக்காமல் இருப்பதற்கான சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

வாக்குகள் பெரும்பான்மை இனத்தில் பிரிந்து போகின்ற பட்சத்தில் நிச்சயமாக முடிவெடுக்க வேண்டிய வாக்காளர்களாக தமிழ் மக்கள் இருக்கப் போகின்றார்கள்.

அரசியல்வாதிகளின் திட்டத்திற்கு அடிபணிய வேண்டாம்!..தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | A Request To The Tamil People

எனவே, தமிழர்களை எவ்வாறு அரவணைத்து செல்லலாம் எனவும் தமிழர்கள் மீது எவ்வாறு பூச்சூடி ஆசனத்தை பெறலாம் எனவும் அவர்கள் இனி சிந்திக்கத் தொடங்குவார்கள்.

அனுரகுமார திசாநாயக்க யாழ் மாவட்டத்திற்கு அண்மையில் வருகை தந்திருந்தார் .எந்தவிதமான தமிழர்கள் சார்ந்த உரிமைக்கான உத்தரவாதத்தினையும் அவர் வழங்கவில்லை.

இதில் மிகக் கேலியான விடயம் என்னவெனில் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்து விட்டால் பிரச்சனைகள் தீர்ந்து விடுமாம்.

இது எவ்வாறு இருக்கின்றது என்றால் ரணில் விக்ரமசிங்க அபிவிருத்தி அடைந்து விட்டால் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுவதைப் போன்று காணப்படுகின்றது.

அனுரகுமார திசாநாயக்க வடக்கு - கிழக்கை பிரித்தவர். இரண்டாவது தன்னுடைய பதவியிலிருந்து விலகி எமது நிலைப்பாட்டை குழப்பியவர். இதனை ஒருவரும் மறந்துவிடக்கூடாது.

இங்கே ஒரு உண்மை உள்ளது. தமிழர் மக்கள் நடந்ததை மிக விரைவில் மறந்து விடுவார்கள்.

இந்த முறை மறந்துவிட மாட்டார்கள். நான் மாத்திரம் அல்ல எந்தக் கட்சியாக இருந்தாலும் தமிழ் மக்களை ஒருங்கிணைத்து ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்த வேண்டும். தங்களுடைய வாக்குகள் சிதறடிக்க கூடாது.

தென்னிலங்கை அரசியல்வாதிகள் 

எக்காரணம் கொண்டும் தென்னிலங்கையை சேர்ந்தவருக்கு நாம் வாக்களிக்க கடாது. இது தொடர்பில் இளைஞர்களுக்கு உரிய அரசியல் தெளிவூட்டல் வழங்கப்பட வேண்டும்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற கோட்டாபய ராஜபக்ச சிங்கள வாக்குகளால் மாத்திரமே தான் வெற்றி பெற்றதாக மார்தட்டி பேசினார். அவருடைய நடவடிக்கைகள் அவரை பதவியால் துரத்த செய்தது. 

முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.

அரசியல்வாதிகளின் திட்டத்திற்கு அடிபணிய வேண்டாம்!..தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | A Request To The Tamil People

அதனைக் கண்டும் காணாமல் இருக்கின்ற சஜித் பிரேமதாச இன்று தென்னிலங்கை வாக்குகளை பெறுவதற்காக ஈஸ்டர் தாக்குதலை பற்றி கூடுதலாக பேசுகின்றார்.

அங்கே தென்னிலங்கையிலே ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையை கோருகின்ற சஜித் பிரேமதாச முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பிலும் சர்வதேச விசாரணையை கூற முடியாதது ஏன்? காணாமல் போனோர் தொடர்பில் மௌனம் காப்பது ஏன்? அவர்களுக்கான நீதித் தொடர்பில் கதை பேசாது இருப்பது ஏன்? 2019ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு நல்ல ஒரு தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் சஜித் பிரேமதாசாவிற்கு வாக்குகளை அள்ளிக் கொடுத்தோம்.

அன்றிலிருந்து கூட தனக்கு இவ்வளவு மக்கள் ஆதரவளித்தார்களே என்று இந்த மக்களுக்காக குரல் கொடுக்கவில்லை.

அண்மையில் வெடுக்குநாறிமலை விடயம்தொடர்பில் நாடாளுமன்றத்தில் தனது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார். எது எவ்வாறாயினும் தேர்தலில் இவர்கள் தமிழ் மக்கள் சார்பில் கேள்விகளை கேட்டால் சிங்கள பெரும்பான்மை இவர்களை உதறித் தள்ளிவிடும்.

பதவிக்கு வந்தால் கூட தமிழர்கள் மீதான உரிமைகளை வழங்குவதில் இவர்கள் காலத்தை தாழ்த்துகிறார்கள். இதற்கு உதாரணம் கடந்த 70 கால வருடங்கள்.

இந்த பொது வேட்பாளர் தொடர்பில் பல பேர் பல வியாக்கியானங்களை கூறலாம் சேர்ந்து நில்லுங்கள் சேர்ந்த பெற்றுக் கொள்ளுங்கள் என பலர் கூறலாம்.

நாங்கள் சேர்ந்து அரசாங்கத்துடன் பயணிக்கவில்லையா நல்லாட்சி காலத்தில் எவ்வளவு விடயங்களை நாங்கள் மேற்கொண்டும் ஏமாற்றப்பட்டோம்.

இந்தியா மற்றும் வெளிநாட்டு தூதர்களாக இது தொடர்பில் கதைப்பதற்கு வருவார்கள். முதலில் அவர்கள் கதைப்பதில் எந்தவித பிரயோசனமும் இல்லை.

காரணம் சந்திரிகாவின் காலம் முதல் தமக்கு தேவை ஏற்படுகின்ற பொழுதெல்லாம் இந்த நல்லிணக்க பேச்சுக்கள் ஆரம்பமாகும்.

ஒவ்வொரு முறையும் இந்த சர்வதேசம், சிங்களப் பெரும்பான்மை அரசிற்கே தமது ஆதரவினை வழங்கி வருகின்றது.

ஜெனிவா விடயம் இழுத்தடிப்பு செய்யப்பட்டு கொண்டே செல்கின்றது. ஒரு முடிவு கிடைக்கப்பெற்றதாக இல்லை.   

தமிழ் மக்களின் முடிவு

இப்பொழுது தேர்தல் காலம் வருகின்றது. அங்கே ரணில் வருகின்றார். ரவிகருணாநாயக்க வருகிறார். சஜித் பிரேமதாசர வருகின்றார். திசாநாயக்கமும் வருகின்றார். அனைவரும் தங்களுடைய தேவைகளை ஒட்டி யாழ் மக்களிடம் வாக்கு பிச்சை எடுப்பதற்கு வருகின்றார்கள்.

அவர்களுக்கு முதுகெலும்பியிருந்தால் முதலில் எங்களுடைய பிரச்சனைகளை விளங்கிக் கொண்ட அதற்குரிய தீர்வுகளை வழங்க வேண்டும். கடந்த தேர்தல்களில் தென்னிலங்கையை சேர்ந்தோருக்கு வாக்களித்து மாபெரும் தவறினை நாம் இழைத்திருந்தோம்.

எந்தக் கட்சி கேட்டாலும் தமிழ் மக்கள் சிந்தித்து முடிவெடுங்கள். அது எந்த கட்சியாகவும் இருக்கட்டும். தற்பொழுது இந்த பொது வேட்பாளருக்கு பல பெயர்கள் அடிபடுகின்றது.

அரசியல்வாதிகளின் திட்டத்திற்கு அடிபணிய வேண்டாம்!..தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | A Request To The Tamil People

அது எந்த வேட்பாளராகவும் இருக்கட்டும். மக்களால் ஏற்றுக் கொள்ளக் ஏற்றுக்கொள்ளக் கூடியவராகவும் சிறிதளவேனும் அரசியல் ஈடுபாடு உடையவராகவும் இருக்க வேண்டும் .

நிச்சயமாக தமிழ் மக்களால் ஒரு பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியும். அதனைத் தொடர்ந்து நாம் அடுத்த இலக்கு நோக்கி பயணிக்கலாம்.

அனைத்துக் கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் இந்த பொது வேட்பாளர் குறித்து பேச தொடங்கியுள்ளன. தமிழரசு கட்சி தொடர்பில் இன்னமும் பேசவில்லை. தமிழரசு கட்சி என்ன சொல்கின்றதோ எனக்கு தெரியாது. என்னுடைய நிலைப்பாடு பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டும்.

இது குறித்து நான் மூன்று நான்கு மாதங்களுக்கு முதலில் சிலருடன் இது தொடர்பில் பேசி இருந்தேன்.

தமிழரசு கட்சிகடந்த காலங்களில் எடுத்த முடிவு அனைத்துமே சரி என்று நான் சொல்லவில்லை. எனவே, இந்த முறை அனேகமாக பொது வேட்பாளரை ஆதரிப்பார்கள் என்று தான் நினைக்கின்றேன்.

வடக்கு கிழக்கில் மேலோங்கி இருக்கும் தமிழரசு கட்சி தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் நல்ல முடிவு ஒன்று எடுக்கப்படும் இலங்கை தமிழரசு கட்சி பல முடிவுகள் ஆரம்பகாலத்தில் எடுத்தும் அது சாதகமாக உமக்கு ஏற்றது போல் அமையவில்லை.

சரத் பொன்சேகவிற்கு ஆதரவளிப்பதாக எடுத்த முடிவு பிழையாகிப் போனது. சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிப்பதாக எடுத்த முடிவு பிழையாக போனது. ஆகவே, இந்த முறையும் அவ்வாறான தவறுகளை கட்சி விடாது என நம்புகின்றேன்.

அத்துடன், இனி இவ்வாறான முடிவு எடுக்கப்படுகின்ற பொழுது அதனை கேட்பதற்கு மக்களும் தயாராக இல்லை. கட்சி உறுப்பினர்களும் தயாராக இல்லை.

ஆகவே திடகாத்திரமாக தமிழ் மக்கள் இம்முறை பொது வேட்பாளர் ஒருவருக்கு தங்களுடைய வாக்குகளை அளிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவின் கட்சியில் தலைவர்கள் நீண்ட காலம் பதவியில் இருக்க முடியாது: பொன்சேகா

சஜித் பிரேமதாசவின் கட்சியில் தலைவர்கள் நீண்ட காலம் பதவியில் இருக்க முடியாது: பொன்சேகா

தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாட தீர்மானம்

தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் தொடர்பில் கலந்துரையாட தீர்மானம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Paris, France

11 Apr, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

15 Apr, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

11 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, Herne, Germany, Datteln, Germany

12 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அம்பனை, Eastham, United Kingdom, London, United Kingdom

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Ottawa, Canada

25 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US