13ஆவது திருத்தம் தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையவில்லை!
கடந்த 16 ஆண்டுகளில் ஈழத்தமிழர்கள் தமது அரசியல் ரீதியாக எதையுமே சாதிக்கவில்லை என்றும், மாகாண சபைகளும் 13ஆவது திருத்தமும் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக அமையவில்லை எனவும் மூத்த அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் 'சக்கரவியூகம்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்திய-இலங்கை உடன்படிக்கையின் 'குழந்தை' எனக் கருதப்படும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இந்தியா போதிய அழுத்தம் கொடுக்கவில்லை.
தற்போது இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், அந்த உடன்படிக்கையின் நோக்கமே இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.
அதே நேரம் தமிழ்க் கட்சிகள் வெறும் தேர்தல் கேட்கும் குழுக்களாக மாறியுள்ளன எனவும் மக்களுக்காகத் தொடர்ச்சியாகப் போராடும் பலமான அடிமட்டக் கட்டமைப்புகள் நம்மிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri