தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை
காஸ்மீரின் பஹல்கம்மில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை அடுத்து, இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை நாடு கடத்தும் செயற்பாடுகள் தீவிரமாகியுள்ளன.
இதில் அதிகமாக பங்களாதேஸ் நாட்டவர்களே அதிகமாக நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் தங்க வேண்டுமாயின்
இந்தநிலையில், குறித்த நடவடிக்கை தற்போது, இந்தியாவில் பதிவுகள் இன்றி தங்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் ஒரு கட்டமாக தமிழக நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மறுவாழ்வு முகாமில் உள்ள 60க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் உரிய வீசா இன்றி நாட்டில் தங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது
இவர்கள் சுற்றுலா வீசாவிலேயே நாட்டுக்குள் வந்துள்ளதாக தமிழக தகவல்கள் கூறுகின்றன.
இந்தநிலையில் தொடர்ந்தும் தங்க வேண்டுமாயின் நீண்ட கால வீசாவைபெற்றுக் கொள்ள வேண்டும் அல்லது 10 நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என்று அவர்கள் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri
