காஷ்மீர் தாக்குதலுக்கு எதிராககொழும்பில் இன்று போராட்டம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு எதிராகக் கொழும்பில் இன்று(30) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பைசரன் எனும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளத்தில் முகமூடி அணிந்த பயங்கரவாதிகள், அங்கு கூடியிருந்த மக்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.
போராட்டம்
இந்தச் சம்பவத்தில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.
இது கண்டிக்கத்தக்க விடயம் எனக் கூறி சர்வதேச அரங்கில் பாரிய எதிர்ப்பு பாகிஸ்தானுக்கு எதிராகக் கிளம்பி இருந்த நிலையில், தற்போது இலங்கையில் காஷ்மீர் தாக்குதலுக்கு எதிராகக் கொழும்பில் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டம் 'எமது தலைமுறை கட்சி'யின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தலைமையில் இடம்பெற்றது.
போராட்டத்தின் நிறைவில் சிதம்பரம் கருணாநிதி கருத்துத் தெரிவிக்கும்போது,
"காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. பயங்கரவாதத்தை - தீவிரவாதத்தை முற்றாக ஒழிக்க வேண்டும்" - என குறிப்பிட்டுள்ளார்.

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு கெட்ட செய்தி... இந்திய ஆயுதப் படை சொந்தமாக்கவிருக்கும் ஆபத்தான ட்ரோன் News Lankasri
