ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு இலங்கை பங்குச்சந்தைகள் வீழ்ச்சி: முகவர்கள் வெளியிட்ட தகவல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுமாறு, இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு, உத்தரவிட்டதன் பின்னர், வெள்ளிக்கிழமை (22) முதல் முறையாக இலங்கை பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளதாக முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய அனைத்து பங்கு விலைக் குறியீடு (ASPI) 0.19% அல்லது 14.59 புள்ளிகள் குறைந்து 7,721.78 ஆக நிறைவடைந்துள்ளது.
அதிக திரவ S&P SL20 குறியீட்டு எண் 0.63% அல்லது 15.69 புள்ளிகள் குறைந்து 2,461.98 இல் நிறைவடைந்தது.
வன்முறையைத் தவிர்த்திருக்கலாம்
இந்த வன்முறையைத் தவிர்த்திருக்கலாம் எனவும், இந்த சம்பவம், கடந்த காலத்தைப் போலவே சந்தையில் அதிக நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் என முகவர்கள் எச்சரித்துள்ளனர்.
அதேநேரம், அனைத்துக் கட்சி ஒற்றுமை அரசாங்கத்தில், பங்குச் சந்தை நம்பிக்கையாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பணவீக்கம் காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்து |
மிக மோசமான எரிபொருள் நெருக்கடி
இலங்கை சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் மிக மோசமான எரிபொருள்
நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதுடன், இந்த ஆண்டு பொருளாதாரம் 8-10% க்கு இடையில்
சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அதிக அளவு பணம் அச்சிடப்பட்டபோது 80% வருமானத்துடன் உலகின் சிறந்த
பங்குச் சந்தைகளில் ஒன்றாக இருந்த கொழும்பு பங்குச் சந்தை இந்த ஆண்டு இதுவரை
36.8% வருமானத்தை இழந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.