அமெரிக்காவின் தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிடும் இலங்கை
முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரண்ணாகொடவை அமெரிக்கா கறுப்பு பட்டியலில் இட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த தீர்மானம் குறித்து கடும் கரிசனை கொண்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த தீர்மானம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் தனது கரிசனையை வெளியிட்டுள்ளார்.
மிக நீண்ட கால இலங்கையின் நட்பு நாடான அமெரிக்கா தன்னிச்சையாகவும், உரிய நடைமுறைகளை பின்பற்றாதும் எடுத்த தீர்மானம் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளில் பாதக எதிர்வினைககளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது.
நல்லாட்சியையும் நல்லிணக்க கட்டமைப்பையும் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளின் பின்னணியில் இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றமை துரதிஷ்டவசமானது என குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறெனினும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், சமூகப் பொருளாதார அபிவிருத்தியை ஈட்டுவதற்குமான இலங்கையின் பயணம் தொடரும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டின் அடிப்படையில் கரன்னாகொட கறுப்பு பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
