அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை! கறுப்புப் பட்டியலில் இணைக்கப்பட்ட வசந்த கரன்னாகொட
வடமேற்கு மாகாண ஆளுநரான வசந்த கரன்னாகொட, 2023 இராஜாங்கத் திணைக்களம், வெளிநாட்டுச் செயற்பாடுகள் மற்றும் தொடர்புடைய நிகழ்ச்சித்திட்டங்கள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் பிரிவு 7031(உ) இன் படி, அமெரிக்காவின் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடற்படைத் தளபதியாக இருந்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் நடவடிக்கையின் விளைவாக கரன்னாகொட மற்றும் அவரது மனைவி ஸ்ரீமதி அசோக கரன்னாகொட ஆகியோர் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தகுதியற்றவர்கள் என்று அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்டனி ஜே பிளிங்கன் அறிவித்துள்ளார.
அரச சார்பற்ற நிறுவனங்களாலும் சுயாதீன விசாரணைகளாலும் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு பாரிய மனித உரிமை மீறல்களை வசந்த கரன்னாகொட மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கள், பாரதூரமானதும் நம்பகமானதும் ஆகும்.
The United States is designating Sri Lankan Governor and retired Admiral Wasantha Karannagoda for a gross violation of human rights. The United States continues to seek truth and justice for victims of the Sri Lankan civil war.
— Secretary Antony Blinken (@SecBlinken) April 26, 2023
75 வருடம் பகிரப்பட்ட வரலாறு
எனவே வசந்த கரன்னாகொடவை கறுப்புப்பட்டியலில் இணைப்பதன் மூலம், மனித உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும், மனித உரிமைகளை மீறுபவர்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு பெறுவதை தடுப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களின் துன்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும், இலங்கையில் குற்றவாளிகளுக்கு பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்கும் அமெரிக்கா தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவு, 75 வருட பகிரப்பட்ட வரலாறாகும். அத்துடன் மதிப்புகள் மற்றும் சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்க்கான அர்ப்பணிப்பின் அடிப்படையிலானதாகும். இருதரப்பு உறவை நாம் தொடர்ந்து கட்டியெழுப்பும்போது, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு அமெரிக்கா கடமைப்பட்டுள்ளது.
அதேநேரம், அதிகரித்து வரும் பாதுகாப்பு கவலைகளை நிவர்த்தி செய்யவும் இது உதவும் என்றும் அமெரிக்க ராஜாங்க செயலாளர் அன்டனி ஜே பிளிங்கன் அறிவித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில் கரண்ணாகொட முக்கியமானவராக பேசப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.