இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக கடும் போக்கு: நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ள இலங்கை

Indian fishermen Sri Lanka
By Sivaa Mayuri Oct 27, 2024 10:03 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

வடக்கு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் இலங்கை அரசாங்கம், தனது நிலைப்பாட்டை மீண்டும் இந்தியாவிடம் வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் (Colombo) எதிர்வரும் செவ்வாய்கிழமையன்று நடைபெறும், இந்திய-இலங்கை கூட்டுச் செயற்குழுவின் ஆறாவது கூட்டத்தில் இலங்கை தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவுள்ளது.

சக வேட்பாளர்களை அச்சுறுத்திய தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர்

சக வேட்பாளர்களை அச்சுறுத்திய தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளர்

இலங்கையின் கடல் வளங்கள்

வடக்கில் 400-500 இந்திய அடிமட்ட இழுவை படகுகள் வாரத்தில் மூன்று நாட்கள் இலங்கையின் கடல் வளங்களை சுரண்டுவதை அனுமதிக்க முடியாது என கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம். விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக கடும் போக்கு: நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ள இலங்கை | Sl Reiterate Tough Stance Against Bottom Trawling

இதன் காரணமாகவே கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும், அவர்களின் படகுகளை புதிய சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யவும் அமைச்சகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு அதிக அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாகவும் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் செவ்வாயன்று நடைபெறவுள்ள இந்திய- இலங்கைக் கூட்டத்தில் இந்தியக் குழுவில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு மாநில அரசின் மூத்த அதிகாரிகள் இடம்பெறுவார்கள்.

இதேவேளை 2016 முதல், இந்திய-இலங்கை கூட்டுச் செயற்குழுவின் ஐந்து சுற்றுகள் நடத்தப்பட்டுள்ளன. இறுதியாக 2022 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி இலங்கையில் இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

 

அநுர மீது நம்பிக்கையிழந்த அமெரிக்கா! விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை

அநுர மீது நம்பிக்கையிழந்த அமெரிக்கா! விடுக்கப்பட்ட நேரடி எச்சரிக்கை

சுற்றுலா எச்சரிக்கை ஆலோசனைகளை நீக்கும் முயற்சியில் இலங்கை

சுற்றுலா எச்சரிக்கை ஆலோசனைகளை நீக்கும் முயற்சியில் இலங்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US