புகையிரத திணைக்கள ஊழியர்களின் போராட்டம் ஆரம்பம் (Video)
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான இப் போராட்டமானது தற்போது ஜனாதிபதி மாளிகையை நோக்கி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சத்தம் வீதியிலும் (Chatham street colombo) அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
எனவே தற்போது இவ்விரு போராட்டக்காரர்களும் ஒன்றாக இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க உள்ளனர் என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
புகையிரத திணைக்கள ஊழியர்கள் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும்நிலையிலே தற்போது இப்போராட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.
இப் போராட்டத்தை மறித்து பொலிஸார் வீதி தடைகளை ஏற்படுத்தி வருவதோடு ஆர்பாட்டங்காரர்கள் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
