மின்வெட்டு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் பகலில் 1 மணி நேரமும், இரவில் 1 மணி நேரம் 20 நிமிடங்களும் நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி வரை தொடரும் என மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவிலே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
குறைக்கப்படும் மின்வெட்டு நேரம்
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3ஆம் அலகு, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி திட்டமிட்டபடி தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட பின்னர், நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் இரவு நேர மின்வெட்டு 1 மணித்தியாலமாக குறைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
2) With the scheduled addition of Unit 3 of Coal Plant to the Grid on 15th of Dec, all Tourism zones identified by the Ministry of Tourism, will be exempted from night power cuts & Islandwide night power cut will be reduced to 1 hour. No power cuts during Christmas & New Year.
— Kanchana Wijesekera (@kanchana_wij) November 30, 2022
மேலும், சுற்றுலா அமைச்சினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா வலயங்களுக்கும் அதன்பின்னர், இரவு நேர மின்வெட்டுகளிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு
இதேவேளை, தென் மாகாணம் மற்றும் எல்ல சுற்றுலா வலயங்களுக்கு டிசெம்பர் 1ஆம் திகதி முதல் இரவு வேளையில் 1 மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் மின்வெட்டு நடைமுறைப்பபடுத்தப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri