குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்: ராஜமணி பிரசாந்த் (video)

Ceylon Workers Congress Sri Lanka Sri Lankan political crisis
By Thirumal Nov 28, 2022 09:39 PM GMT
Report

“கொட்டகலை பிரதேச சபையில் ஊழல் இடம்பெற்றுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் இராதாகிருஷ்ணன், நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து அப்பட்டமான பொய்யாகும் எனவும் ஊழல் இடம்பெற்றுள்ளது என்பதை நிரூபித்தால் பதவி விலக தயார்" என கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் இராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (28) நடைபெற்றது.


இராஜமணி பிரசாந்த்

இதன்போது கொட்டகலை பிரதேச சபை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன், அதிஉயர் சபையான நாடாளுமன்றத்தில் பொய்யான கருத்துகளை முன்வைத்துள்ளார் எனக்கூறி, அதற்கான ஆதாரங்களை தவிசாளர் இராஜமணி பிரசாந்த் முன்வைத்துள்ளார். 

இதன்போது விசேட விளக்கமொன்றையும் முன்வைத்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

"கொட்டகலை பிரதேச சபைக்கு நகர அபிவிருத்தி சபை 3 ஏக்கர் காணி வழங்கியுள்ளது என ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். அது பொய். ஒரு ஏக்கர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

அது இலவசமாக வழங்கப்படவில்லை. அதற்கும் மாதாந்தம் நாம் கூலி செலுத்துகின்றோம். இராதாகிருஷ்ணன் பிரதேசசபை தவிசாளராக இருந்த காலத்தில்தான் ஊழல்கள் இடம்பெற்றுள்ளன.

ஊழல்

குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்: ராஜமணி பிரசாந்த் (video) | Sl Political Crisis Ceylon Workers Congress

18 குடியிருப்புகள் இருந்த பகுதியொன்றில் லஞ்சம் வாங்கிக்கொண்டு, தனக்கு வேண்டப்பட்ட ஐவருக்கு மாத்திரமே உறுதிப்பத்திரம் பெற்றுக்கொடுத்துள்ளார்.

அவர் இராஜாங்க அமைச்சராக இருந்துள்ளார். எனவே, பொறுப்புடன் கதைக்க வேண்டும், தகவல்களை வெளியிட வேண்டும். ஒரு சிலரை திருப்திபடுத்துவதற்காக பொய்யுரைக்ககூடாது. கொட்டகலை பிரதேச சபை, நுவரெலியா மாவட்டத்திலேயே சிறந்த பிரதேச சபை என்பதற்காக இரு தடவைகள் விருந்து வென்றுள்ளது.

ஊழல் எதுவும் இடம்பெறவில்லை. அவ்வாறு இடம்பெற்றுள்ளது என நிரூபித்தால் பதவி விலக நான் தயார். முறைப்பாடுகளை முன்வைக்க இடங்கள் உள்ளன. அங்கு முறைப்பாடுகளை தெரிவிக்கலாம்.

கடந்த காலத்தில் மலையக மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய நுவரெலியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சதாசிவனும், முன்னாள் செயலாளராக இருந்த பிரதீப் ஆகியோரும் நுவரெலியா பிரதேச சபையின் புதிய சபை கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணியில் ஊழல் செய்துள்ளதாவும், அதற்கான ஆதரங்களும் தன்னிடம் உள்ளதாகவும் பிரதேச சபை தவிசாளர் ராஜமணி பிரசாந்த் மேலும் தெரிவித்துள்ளார். 

இறுதியில் எம்.பி. இராதாகிருஷ்ணன் மற்றும் தவிசாளர் ராஜமணி பிரசாந்த ஆகியோர் முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை முன்வைக்குமாறு பிரதேச செயலாளருக்கு, குழுவின் தலைவர் ஜீவன் தொண்டமான் ஆலோசனை வழங்கியுள்ளார். 

இ.தொ.காவின் தவிசாளரும், நிதி செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US