மலேசியா சர்வதேச மதத் தலைவர்களின் மாநாட்டில் இலங்கையர்கள் பங்கேற்பு
மலேசியா (Malaysia) கோலாலம்பூரில் நடைபெற்று வரும் சர்வதேச மதத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து (Sri Lanka) மதத் தலைவர்கள் மலேசியா சென்றுள்ளனர்.
குறித்த மாநாடு நேற்று (07.05.224) ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் இதில் 63 நாடுகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இலங்கைப் பங்கேற்பாளர்கள்
ஐந்து நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டில் இலங்கையில் இருந்து சென்றுள்ள அணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் பலீல் தலைமையிலான சர்வமதக் குழு தலைமை தாங்குகிறது.
இந்த மாநாடானது உலகெங்கிலும் உள்ள மதத் தலைவர்களிடையே அமைதி, நல்லிணக்கம் மற்றும் வேற்றுமைக்குள் ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு நடைபெறுகின்றது.
இதில், அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தலைப்பில் உரை ஒன்றும் நிகழ்த்தவுள்ளார்.