வடமராட்சி கிழக்கு கடற்றொழில் சங்கங்களுக்கு கடற்படை முக்கிய அறிவித்தல்!
வடக்கு பிராந்திய இலங்கை கடற் படையினர் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பருத்தித்துறை கடலில் சூட்டு பயிற்சி மேற்கொள்ள இருப்பதால் கடற்றொழிலாளர்களை குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் (24) மற்றும் (27) ஆகிய இரண்டு நாட்களும் பருத்தித்துறை கடலில் கடற்படை கலங்களான P475, P481 ஆகிய கலங்களில் இருந்து சூட்டு பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
இலங்கை கரையோர காவற்படையின் வடக்கு பிராந்திய பணிப்பாளர் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக அனைத்து கடற்றொழில் சங்கங்களுக்கும் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
அறிவுறுத்தல்
எதிர்வரும் 24.01.2025 காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணிவரை 23.2NM north east of ppd Coordinate (s)of the location 09°55’N:080°42E 09°55N:080°36E 09°51N:080°42E 09°51N:080°36E. ஆகிய கடற்பரப்புக்களில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாமென குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று எதிர்வரும் 27.01.2025 அன்று காலை 09.00 மணியிலிருந்து மாலை 04.00 மணிவரை 23.2NM north east of ppd Coordinate (s)of the location 09°55’N:080°42E 09°55N:080°36E 09°51N:080°42E 09°51N:080°36E.ஆகிய குறித்த கடற்பரப்புகளில் உள்நுழைந்து கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாமென கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam
