பாகிஸ்தானுக்கு சென்று நாடு திரும்பிய, இலங்கை தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பிரதிநிதிகள்
இலங்கை தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் பிரதிநிதிகள் குழு ஒன்று, ஏப்ரல் 26 முதல் மே 6 வரை பாகிஸ்தானுக்கு சர்வதேச கூட்டுப் பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ளனர்.
இந்தக் குழுவிற்கு மூத்த இயக்குநர் பணியாளர் கொமடோர் நிமல் ரணசிங்க தலைமை தாங்கினார்.
மேலும் முப்படைகள் மற்றும் பொலிஸை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 அதிகாரிகள் இதில் அடங்கியிருந்தனர்.
பயணத் திட்டம்
பத்து நாள் பயணத்தின் போது, வெளியுறவு அமைச்சகம், சேவைத் தலைமையகம், அந்தந்த கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரிகள், பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தி நிறுவனங்கள், தொழில்துறை மண்டலங்கள் மற்றும் கலாச்சார மற்றும் மத ஆர்வமுள்ள இடங்களுக்கு இலங்கையின் தூதுக்குழு சென்றது.
பயணத் திட்டத்தின் ஒரு பகுதியாக, தூதுக்குழு இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரை சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
