சிறீதரன் எம்.பியை விமான நிலையத்தில் தடுத்த காரணங்கள் காலம் கடந்து அம்பலம்
சென்னையில் நடைபெற்ற அயலக தமிழர் மாநாட்டுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கலந்து கொண்டபோது அவருக்கு சரியான முறையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டமை சுமந்திரனால் ஏற்றுக் கொள்ளமுடியாமல் இருந்தது என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் ஜனவரி 11ஆம் திகதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற அயலக தமிழர் மாநாட்டுக்குச் சென்ற இலங்கை தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய சமயத்தில் இது தொடர்பில் அதிகாரிகளிடம் வினவியபோது பயணத் தடை விதிக்கப்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக தெரிவித்த சிறீதரன், எனினும் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் சுமந்திரனை விசாரிக்குமாறும் சிறீதரன் நாடாளுமன்றில் தெரிவித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறீதரன் விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட காரணங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,
ஜனாதிபதியின் போதை ஒழிப்பு நிகழ்வுக்கு 70 பேருந்துகளில் ஆட்கள் - வெறிச்சோடிய யாழ். பிரதான பஸ் நிலையம்!
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri