வெனிசுலா நிலைமை குறித்து இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு
வெனிசுலாவின் நிலைமை குறித்து இலங்கை அரசாங்கம் தீவிர அவதானத்துடன் இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், பலத்தை பிரயோகிப்பதைத் தடுத்தல், தலையிடாமை, சர்வதேச பிணக்குகளை அமைதியான முறையில் தீர்த்துக்கொள்ளல் மற்றும் அரசுகளின் இறைமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு போன்ற சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சாசன கோட்பாடுகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை வலியுறுத்துகிறது.
கோரிக்கை
வெனிசுலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை தொடர்பில் இலங்கை அதிக முக்கியத்துவம் அளிப்பதுடன், பதற்றத்தைக் குறைத்து, பேச்சுவார்த்தை மூலம் அமைதியான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்குமாறு இலங்கை அனைத்துத் தரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கிறது.

இந்தத் தீர்மானமிக்க தருணத்தில், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை போன்ற அதன் நிறுவனங்கள் இந்த விடயத்தை கையாண்டு வெனிசுலா மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் இறைமை உரிமைகளைக் கருத்திற்கொண்டு, அமைதியான தீர்வொன்றை அடைவதற்கு நடவடிக்கை எடுப்பது அவசிமானது எனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri