13வது ஆசிய மகளிர் வலைப்பந்தாட்டப் போட்டிகளில் இலங்கை முன்னிலை
இந்தியா பெங்களூரில் நடைபெறும் 13வது ஆசிய நிலை வலைப்பந்தாட்ட போட்டிகளில் இன்று இலங்கை மகளிர் அணி மாலைத்தீவுகள் அணியை எதிர்த்து போட்டியிடுகிறது.
இந்தப்போட்டி மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதனை தவிர, இன்று சீனா தாய்பேய் மற்றும் சிங்கப்பூர் அணிகளுக்கு இடையிலான போட்டியும், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியும், ஈராக் மற்றும் பஹ்ரைன் அணிகளுக்கு இடையிலான போட்டியும் இடம்பெறவுள்ளன.
அத்துடன் தாய்லாந்து மற்றும் ஹொங்கொங் அணிகளுக்கு இடையிலான போட்டியும் இடம்பெறுகிறது.
போட்டி முடிவுகள்
இந்தநிலையில் ஒக்டோபர் 18 ஆம் திகதி ஆரம்பமான இந்த போட்டிகளின் இறுதிப்போட்டி எதிர்வரும் 27ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது

இதுவரையான போட்டி முடிவுகளின்படி இலங்கை அணி குழு ஏ இல் போட்டியிட்ட 5 போட்டிகளிலும் வெற்றியீட்டி 10 புள்ளிகளை பெற்றுள்ளது. மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் அணிகள் தலா 8 புள்ளிகளை பெற்றுள்ளன.
குழு பி இல் சிங்கப்பூர் மகளிர் அணி போட்டியிட்ட 5 போட்டிகளிலும் வெற்றியீட்டி 10 புள்ளிகளை பெற்றுள்ளது.
ஹொங்கொங் மற்றும் தாய்லாந்து அணி தலா 8 புள்ளிகளை பெற்றுள்ளன. மாலைத்தீவு 6 புள்ளிகளை பெற்றுள்ளது.
எனினும் இந்திய மற்றும் ஜப்பானிய அணிகள் தலா 2 புள்ளிகளை மாத்திரமே பெற்றுள்ளன.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 11 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri