இராணுவத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதனாலே இலங்கை அரசாங்கம் வங்குரோத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு

Sri Lanka Army Mullaitivu Government Of Sri Lanka
By Shan Aug 11, 2025 02:33 PM GMT
Report

இராணுவத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதனாலே இலங்கை அரசாங்கம் படுவங்குரோத்தில் இருக்கிறது என முன்னாள் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் சண்முகராசா ஜீவராசா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞனான எதிர்மன்னசிங்கம் கபில்ராஜிற்கு  இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, இராணுவத்தின் தாக்குதல் வடக்கு, கிழக்கிலே அனைத்து இடங்களிலும் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றது. அதனை தட்டி கேட்பதற்கு இலங்கை அரசால் முடியாது.

அடாத்தாக வீட்டினுள் நுழைந்த பிரதியமைச்சரின் இணைப்பாளர் நையப்புடைப்பு

அடாத்தாக வீட்டினுள் நுழைந்த பிரதியமைச்சரின் இணைப்பாளர் நையப்புடைப்பு

அரசாங்கத்தின் நிலமை

ஐ.நாவிடம் கேட்கின்றோம் பிரிந்து செல்வதற்காக. இங்கு நடைபெறுவது அநீதி என்பது அனைவருக்கும் தெரியும். மக்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.

இராணுவத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதனாலே இலங்கை அரசாங்கம் வங்குரோத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு | Sl Government Is Bankrupt Military Funding

அண்மையில் சுண்டிக்குளத்திலும் கடற்படையினால் தாக்கப்பட்டவர் உயிர் போகும் நேரத்தில் காப்பாற்றப்பட்டிருக்கின்றார். நாங்கள் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நிற்கின்றோம்.ஆனாலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.

இலங்கை அரசாங்கத்தின் நிலைமை படுவங்குரோத்தில் இருப்பது இராணுவத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டதனாலே.இராணுவத்தை குறைக்க வேண்டும். இராணுவத்தின் செயல் வன்மையாக கண்டிக்க கூடிய விடயம். ஆனால் இந்த பிள்ளைக்கும் தாய்க்கும்  இராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து பிள்ளை 18 வயது வரைக்கும் கொடுப்பனவு கொடுக்க வேண்டும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான யுத்தம்: சூழ்ச்சியில் ஈடுபட்ட அநுர

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான யுத்தம்: சூழ்ச்சியில் ஈடுபட்ட அநுர

சர்வதேச நீதி

வீட்டினை பார்க்கும் போதே தெரிகிறது. அன்றாடம் கூலி வேலை செய்யும் ஒரு நபரே அடித்து சித்திரவதை செய்து குளத்தில் போட்டுள்ளது.ஆனால் இதை மாற்றிவிடுவார்கள். நீதி துறையில் உண்மையான சட்டத்தை கொண்டு வந்தால் கூட அவர்கள் தடுக்க படுகிறார்கள்.

இராணுவத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதனாலே இலங்கை அரசாங்கம் வங்குரோத்தில் உள்ளதாக குற்றச்சாட்டு | Sl Government Is Bankrupt Military Funding

முல்லைத்தீவில் நீதிபதி நீதி கொடுக்க முடியாமல் தப்பியோடியதும் தெரியும். ஆகவே இப்படியான செயல்களை வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறான செயல்கள் தொடர்ந்து நடைபெறுகின்றது என்பதனை சர்வதேசத்திற்கு தெரியப்படுத்துகின்றேன் என மேலும் தெரிவித்தார்.

மண்டையன் குழுவும் செம்மணிக்கு பதில் சொல்ல வேண்டுமா!

மண்டையன் குழுவும் செம்மணிக்கு பதில் சொல்ல வேண்டுமா!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US