அடாத்தாக வீட்டினுள் நுழைந்த பிரதியமைச்சரின் இணைப்பாளர் நையப்புடைப்பு
தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும், பிரதியமைச்சரின் இணைப்பாளர் ஒருவர் அடாத்தாக வீட்டினுள் நுழைந்து அங்கு தனியாக இருந்த பெண்ணிடம் தகாதமுறையில் நடந்து கொள்ள முட்பட்ட சம்பவம் தொடர்பில் பேசுபொருளாகியுள்ளது.
பின்னர் அவர் அயலவர்களின் உதவியை நாடிய நிலையில் பல, பெண்களால் தாக்கப்பட்டு போகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
பெண்களால் தாக்கப்பட்ட இவர் வன்னி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர் ஒருவரின் ஒருங்கிணைப்பு செயலாளர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நையப்புடைப்பு
ஜே.வி.பி.யின் வன்னி மாவட்டக் குழுவின் அதிகாரியான இந்த நபர், வவுனியாவின் நந்திமித்ரகம பகுதியில் ஒரு பெண் மட்டுமே வசித்து வந்த வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்துள்ளார்.

அந்த நேரத்தில், அக்கம் பக்க பெண்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வந்து அந்த நபரைப் பிடித்து நையப்புடைத்துள்ளனர்.
அப்போது அந்நபர் கடும் போதையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கிராமத்தின் பெண்கள் அந்த நபரை அடித்து, கயிறுகளால் கட்டி, போகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், சந்தேகத்திற்குரிய ஒருங்கிணைப்பு செயலாளர் போகஸ்வெவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், தேசிய மக்கள் சக்தியின் ஒரு குழு தலையிட்டு சம்பந்தப்பட்ட நபரை விடுவிக்க நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam