இலங்கையின் கடும் பொருளாதார நெருக்கடிக்கு இந்தியாவின் உதவி
இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ள ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இறுதி செய்வது குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்தியா இதுவரை இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்தார்.
இந்த "இக்கட்டான நேரத்தில்" இலங்கைக்கு ஆதரவளிக்கும் வகையில் எடுக்கப்பட்ட முடிவிற்கு நன்றி தெரிவித்து கொண்டதாக புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் நிதியை முன்கூட்டியே இறுதி செய்வதற்கு உயர் ஸ்தானிகர் நடவடிக்கை எடுத்துள்ளதாக என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam