இலங்கை மின்சாரசபை மறுசீரமைப்பு: வெளியாகியுள்ள ஓய்வூதிய நிபந்தனைகள்
இலங்கை மின்சாரசபையை மறுசீரமைக்கும்போது உருவாக்கப்படும் நான்கு நிறுவனங்களில் எதிலும் பணியாற்ற விரும்பாத, இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான தன்னார்வ ஓய்வூதிய திட்டத்தின் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அதற்கான நிபந்தனைகளையும் எரிசக்தி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள், எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியால் தயாரிக்கப்பட்டுள்ளன.
இழப்பீடு கட்டமைப்பு
இதன்படி, நிரந்தரமாக பணியாற்றும் ஊழியர்களுக்கு தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் செலுத்த வேண்டிய இழப்பீடு பல வகைகளாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
இழப்பீடு வழங்கப்படும் முறை
இதற்கமைய,10 வருடங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவைக் காலம் கொண்ட ஊழியருக்கு, முதல் 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு 12 மாத சேவைக்கு இரண்டு மாத சம்பளமும், மீதமுள்ள ஒவ்வொரு 12 மாத சேவைக்கும் ஒன்றரை மாத சம்பளமும் இழப்பீடாக வழங்கப்படும்.
10 வருடங்களுக்கும் குறைவான சேவைக் காலம் கொண்ட ஊழியருக்கு, ஒவ்வொரு 12 மாத சேவைக்கும் 5 மாத சம்பளம் வழங்கப்படும், மீதமுள்ள சேவைக் காலத்திற்கு இழப்பீடு வழங்கப்படமாட்டாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான விதிமுறைகள் உள்ளிட்ட பல நிபந்தனைகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அம்பானி உடன் இணையும் சுந்தர் பிச்சை, மார்க் ஜூக்கர்பெர்க்! ரூ.855 கோடிக்கு உருவாகும் புதிய திட்டம் News Lankasri

Ethirneechal: தடபுடலாக நடக்கும் தர்ஷன் கல்யாணம்.. பதற்றத்தில் அறிவுக்கரசி- பொண்ணு யார் தெரியுமா? Manithan
