யாழில் புதிய திட்டங்களோடு களமிறங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர் (Video)
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளுக்கான தேவையும் அதிகரித்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது.
இலங்கையின் கடன் செலுத்துகை நிலையானது, மிக அதிகமாகவுள்ளது. எனவே, இந்தத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள, மக்கள் மீது வரிச்சுமையை வழங்காமல், பணத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறையாக, வெளிநாட்டு நேரடி முதலீடுகள் உள்ளன.
இத்தகைய முதலீடுகள், இலங்கையின் உட்கட்டுமான வசதிகளை விரிவுபடுத்த உதவுவதுடன், குறித்த முதலீடுகள் வாயிலாகக் கிடைக்கப்பெறும் இலாபங்கள், மீளவும் இலங்கையிலேயே குறித்த காலப்பகுதிவரை மீள்முதலீடு செய்யப் பயன்படுகின்றது.
இத்தகைய வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் மூலமாக, தொழில்வாய்ப்புகள் முதற்கொண்டு, தொழில்நுட்பப் பல்வகைமை உட்பட, பல்வேறு நலன்களைப் நாம் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
இவ்வாறு, பல்வேறு நலன்களையும் நமது கடனின் மிகப்பெரும் சுமையையும் குறைத்துக் கொள்ளக்கூடிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் மூலமான, நேரடியானதும் மறைமுகமானதுமான மேலதிக நலன்களை அறிந்துகொள்ளுவது அவசியமாகிறது.
இவ்வாறு புதிய திட்டங்களோடு யாழில் களமிறங்கும் Jaffna Horticulture Private Limited நிறுவனத்தின் முழுமையான திட்டங்கள் தொடர்பிலும் அதன் பயன்பாடுகள் தொடர்பிலான முழுமையான தகவல்களை இக் காணொளியில் காணலாம்,