கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு கடத்தப்பட்ட போதைப்பொருள்: சந்தேகநபர் கைது
கொழும்பிலிருந்து வாழைச்சேனைக்கு ஐஸ் போதைப்பொருளைக் கடத்தி வந்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரொருவர் காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் மடக்கிப்பிடிக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
கல்முனையைச் சேர்ந்த 34 வயதுடைய குறித்த சந்தேக நபர் நீண்டகாலமாக கொழும்பிலிருந்து போதைப்பொருளைக் கடத்தி வந்து மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருவதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இராணுவப் புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கை

சந்தேக நபரை கைது செய்வதற்கு இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து கடத்தி வந்த போதைப்பொருளை மாறுவேடத்திலிருந்த காகித ஆலை இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் விற்பனை செய்ய முற்பட்ட போது, சந்தேகநபர் இராணுவப் புலனாய்வு அதிகாரிகளிடம் இருந்து தப்பிச்சென்ற நிலையில் வாகரை-குஞ்சான்குள எல்லைப்புறக் கிராமத்தில் வைத்து மடக்கிப்பிடிக்கப்பட்டார்.
குறித்த சந்தேக நபரிடமிருந்து சுமார் 44 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன், மேலதிக நடவடிக்கைகளை கதிரவெளி விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| தமிழர் பகுதியில் அதிகரிக்கும் திருட்டுச் சம்பவங்கள் (Photos)  | 
    
    
    
    
    
    
    
    
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri