கொழும்பில் இடம்பெற்ற இலங்கை - இந்திய சமுதாய பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம்
இலங்கை - இந்திய சமுதாய பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம் (SLICC 2024)
அண்மையில் கொழுப்பில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பேரவையின் புதிய தலைவராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவுசெய்யப்பட்டார்.
இலங்கை, இந்தியாவுக்கிடையிலான வர்த்தக மற்றும் கலாசார ரீதியிலான நகர்வுகளுக்கான உறவு பாலமாக திகழும் முக்கிய அமைப்பே இதுவாகும்.
வர்த்தக தொடர்பு
இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் முன்னாள் தலைவர் சிவராமன் மற்றும் பேரவையின் உயர்மட்ட உறுப்பினர்களால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரமே தலைமைப்பதவியை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிகழ்வில் போசகர் ராஜூ சிவராமன், பொருளாளர் கே. செல்வகுமார், பொதுச்செயலாளர் அருணாச்சலம் பால்ராஜ், இலங்கை - இந்திய சமுதாய பேரவையின் காப்பாளர் குமார் நடேசன் என பலரும் கலந்துக் கொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார, வர்த்தக தொடர்புகளை மேலும் விரிவாக்குவது, இளம் தொழில் அதிபர்களை உருவாக்குவது மற்றும் இளம் தொழில் முனைவோரை அடையாளம் காணும்போது மலையகத்தில் உள்ள தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்ட விடயங்கள் பற்றி இந்த இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
