இலங்கையும் அவுஸ்திரேலியாவும் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்து
இலங்கையும் அவுஸ்திரேலியாவும் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
இந்த நிகழ்வு, நேற்று நிதியமைச்சில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும், பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கும், மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை குறிப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒப்பந்தங்களில் கையெழுத்து
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் ஹர்ஷனா சூரியப்பெரும, இலங்கை சார்பாக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.

கையொப்பமிடப்பட்ட ஆவணங்களை சூரியப்பெரும மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக பரிமாறிக் கொண்டனர்.
நிலுவையிலுள்ள கடன் மறுசீரமைப்பு
இந்த நிலையில், ஆக்கபூர்வமான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் மூலம், நிலுவையில் உள்ள கடன் கடமைகளை மறுசீரமைத்து, இலங்கைக்கு கடன் நிவாரணத்தை வழங்க அவுஸ்திரேலிய அரசாங்கம், இந்த உடன்படிக்கை மூலம் ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்களின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட மொத்த கடன், 39 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |