கிளிநொச்சியில் சீருடையுடன் மனித எச்சம் கண்டுபிடிப்பு
கிளிநொச்சி (Kilinochchi) பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்த பல மனித எச்சங்களுடன் சீருடை ஒன்றை கண்டெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் (26.04.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் கண்ணிவெடி அகற்றும் குழுவினர் பளை பொலிஸாருக்கு முறையிட்டுள்ளதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பரிசோதனை
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த கிளிநொச்சி நீதவான் குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து அகழ்வுப் பணிகளை நாளைய தினம் (29.04.2024) மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் பணித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
