கோட்டாபய தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: ஐ.ம.சக்தி விடுத்துள்ள எச்சரிக்கை
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்க மறுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிடாத மக்கள் பிரதிநிதிகள் தொடர்பில் மக்கள் தீர்மானம் எடுப்பார்கள் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதே பெரும்பான்மை மக்களின் நிலைப்பாடாக காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து வீதிகளில் போராடுகின்றார்கள் என்பதை அரசாங்கம் இதுவரையில் புரிந்து கொள்ளத் தவறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் நாட்டில் பாரிய பிரச்சினை உண்டு என்பதுவும், ஆட்சியாளர்கள் தோல்வியடைந்துள்ளனர் என்பதுவும் அவர்களின் மனச்சாட்சிகளுக்கு நன்றாகத் தெரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



