ஜனாதிபதி ரணிலுடன் இணையப் போவதில்லை : ஐக்கிய மக்கள் சக்தி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ளப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்வதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாகார் தெரிவித்துள்ளார்.
வதந்திகள்
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச முன்னிலை வகிப்பதனால் இவ்வாறான வதந்திகள் பரப்பப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட நபர்களுடன் கூட்டணி அமைத்துக்கொள்வதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் சில அரசியல் கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கொள்கை ரீதியில் இவ்வாறு இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சிலர் பரப்பி வரும் வதந்திகள் தொடர்பில் மக்கள் போதியளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென பாக்கீர் மாகார் கோரியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam