ஜனாதிபதி செயலக பகுதியில் முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டம் குறித்து வெளியான தகவல் (Photos)
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் கொழும்பில் முன்னெடுக்கவிருந்த ஆர்ப்பாட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சீரற்ற காலநிலை காரணமாக இவ்வாறு ஆர்ப்பாட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சற்றுமுன் எமக்கு தெரித்தார்.
முதலாம் இணைப்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் கொழும்பில் ஆரப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்னும் சற்று நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.







ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
