ஐக்கிய மக்கள் சக்தியில் சரத் பொன்சேகாவின் இடத்துக்கு புதியவர்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சியில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு பதிலாக அந்த கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கரை(Imthiaz Bakeer Markar) அதன் புதிய தலைவராக நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தற்போது இது தொடர்பில் கலந்துரையாடி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார(Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
விவாதம்
இது தொடர்பில் மேலும் கூறுகையில்“நாங்கள் தற்போது இந்த விடயத்தை பற்றி விவாதித்து வருகிறோம்.
2020ஆம் ஆண்டு முதல் பதவி வகித்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா(Sarath Fonseka) தற்போது எம்முடன் இல்லாததால் புதிய தலைவரை நியமிக்க வேண்டியுள்ளது.

இதேவேளை பக்கீர் மார்க்கரை தலைவராக நியமிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை.
மேலும் அடுத்த வாரம் கூடும் என்று எதிர்பார்க்கப்படும் செயற்குழுவால் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் கட்சி மாநாட்டையும் நடத்த திட்டமிட்டுள்ளோம்.'' என்றும் கூறியுள்ளார்.
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    திடீரென பழனிவேல் செய்த காரியம், கண்ணீர்விட்டு அழுத கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam