ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமை அதிரடியாக நீக்கம்
கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமையை அக்கட்சி அதிரடியாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷேன் டேனியல் ராம் என்பவரே கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
வெளியான அறிவிப்பு
கொழும்பு மாநகர சபையின் நேற்றைய அமர்வுக்கு சமூகமளிக்காத காரணத்தினாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு இது தொடர்பான அறிவித்தல் ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.
முன்னதாக கொழும்பு மாநகர சபையின் இன்றைய வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தினால் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் உறுப்பினர் ஒருவரின் கட்சி உறுப்புரிமையை நீக்கி உத்தரவிட்டிருந்தது.