நாட்டை மீட்டெடுக்கக்கூடிய ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே சஜித்
ஆர்வப் பேச்சுக்களைக் பேசி இனியும் நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
முழு நாடும் வங்குரோத்து நிலை
ஏழு தசாப்த கால எதிர்க்கட்சியின் சம்பிரதாய வகிபாகத்தை ஐக்கிய மக்கள் சக்தி முற்றிலும் மாற்றியமைத்துள்ளது.
குறுகிய காலப்பகுதியில் நாட்டுக்குப் பெறுமதி சேர்க்கும் பல சிறந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நாட்டில் ராஜபக்ச ஆட்சி மொத்தம் இருநூற்று இருபது இலட்சம் மக்களையும் பெரும் பேரழிவில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் முழு நாடும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
எனவே, இந்த நாட்டை மீட்டெடுக்கக் கூடிய ஒரே கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே, மக்கள் அனைவரும் இன மத பேதங்களை மறந்து ஓரணியாக எமது கட்சியை ஆதரிக்க
வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.




