அரசாங்கத்துக்கான ஒரே எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே! சம்பிக்க திட்டவட்டம்
தற்போதைய அரசாங்கத்துக்கு எதிரான மக்களின் ஒரே தெரிவு ஐ்க்கிய மக்கள் சக்தி மட்டுமே என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று (04) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது தேசிய மக்கள் சக்திக்கு எதிரான பொதுமக்கள் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டு தரப்பினருக்கும் வாக்களித்திருந்தனர். அந்த வகையில் பொதுமக்களுக்கு இரண்டு தெரிவுகள் இருந்தன.
பொதுத் தேர்தல்
ஆனால், எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது பொதுமக்களுக்கான ஒரே தெரிவு ஐ்க்கிய மக்கள் சக்தி மாத்திரமே. ஏனெனில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளிக்கும் வாக்குகள் வீணாகிப் போகும் என்பது நிச்சயமாகும்.
தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட ஏராளமானோர் முன்வந்துள்ளனர். அவர்களில் பொருத்தமானவர்களை அடையாளம் கண்டு எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னிறுத்துவோம்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 10 மணி நேரம் முன்

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் ரகசிய தொடர்பு., இந்தியாவின் DRDO விருந்தினர் இல்ல மேலாளர் கைது News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
