அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சஜித்! எடுக்கப்பட்டது தீர்மானம்
அடுத்த ஜனாதிபதி தேர்தலில், கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
இந்த பிரேரணைக்கு கட்சியின் செயற்குழு ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியதாக கட்சியின் சிரேஷ்டரான சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
ரணிலின் யோசனையை ஆதரிக்க தீர்மானம்
இதன் அடிப்படையில் இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தலை அறிவிக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனையை ஆதரிக்க கட்சி தீர்மானித்துள்ளதாக சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு அத்தகைய அரசியலமைப்புத்
திருத்தத்தை தமது கட்சி முழுமையாக ஆதரிக்கும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.