தம்பலகாமம் பிரதேச சபையை கைப்பற்றியது ஐக்கிய மக்கள் சக்தி
தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று (19) சபையின் சபா மண்டபத்தில் இடம் பெற்றது.
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் இடம் பெற்ற குறித்த தவிசாளர் தெரிவில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எட்டு வாக்குகளால் எச்.தாலிப் அலி திறந்த வாக்கெடுப்பு மூலமாக தவிசாளராக தெரிவானார். மொத்தமாக 16 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களில் தேசிய மக்கள் சக்தி சார்பில் 3 ,ஐக்கிய மக்கள் சக்தி 3,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 2,இலங்கை தமிழரசு கட்சி 2,ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 2,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ,பொதுஜன ஐக்கிய முண்ணனி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனி தலா ஒருவரும் அடங்குவர்.
மூவின சமூகங்களை சேர்ந்தவர்கள் இச் சபையில் அங்கம் வகிக்கின்றனர். தவிசாளர் தெரிவில் மூவர் போட்டியிட்டனர் இதில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் சார்பில் எச்.தாலிப் அலியும்,ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் எஸ்.எம்.சுபியான் மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்பில் நஜிபுள்ளாவும் போட்டியிட்டனர்.
இதில் திறந்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தி சபையை கைப்பற்றியது குறித்த சபையில் உப தவிசாளராக விஜயானந்தம் விஜய குமார் திறந்த வாக்கெடுப்பு மூலமாக தெரிவு செய்யப்பட்டார்.




ஒவ்வொரு எபிசோடுக்கும் இவ்வளவு சம்பளம் வாங்குகிறார்களா விஜய் டிவி தொகுப்பாளர்கள்... யாருக்கு அதிகம், முழு விவரம் Cineulagam

பாகிஸ்தான், சீனாவிற்கு அதிர்ச்சியளிக்கும் செய்தி., இந்தியா தயாரிக்கவுள்ள புதிய பினாகா ரொக்கெட் அமைப்பு News Lankasri

மெட்டி ஒலி சீரியல் புகழ் நடிகை ரேவதி இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?... லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
