மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலையினால் அரசாங்கம் குழப்பமடைந்துள்ளது
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்ற நிலைமையினால் அரசாங்கம் குழப்படைந்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
மத்திய கிழக்கு போரின் பாரதூர தன்மை குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எவ்வித தெளிவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஓரளவு தெளிவு இருந்திருந்தால் நாட்டில் நெருக்கடிகளை குறிப்பிடத்தக்களவு கட்டுப்படுத்தியிருக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் நிலைமையினால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை வரையறுக்க அரசாங்கம் தவறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார்.