வடக்கு - கிழக்கு சங்க நாயக்க தலைவரான சியம்பலகஸ்கொடுவ விமலசார தேரர் மரணம்
வவுனியாவில் இன, மத பேதமின்றி பலரும் அஞ்சலி வவுனியா, கண்டி வீதியில் அமைந்துள்ள பிரதான பௌத்த விகாரையின் விகாராதிபதியும், வடக்கு கிழக்கு சங்க நாயக்க தலைவருமான சியம்பலகஸ்கொடுவ விமலசார தேரர் சுகவீனம் காரணமாக கடந்த காலமானார்.
சியம்பலகஸ்கொடுவ விமலசார தேரர் சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த புதன்கிழமை மரணமடைந்துள்ளார்.
அவர் இமயமலைப் பிரகடனத்தில் கையொப்பம் இட்டவர் என்பதுடன், வவுனியா மற்றும் வடக்கு பகுதியில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த யுத்த காலத்தில் இருந்து செயற்பட்டதுடன் மூவின மக்களதும் ஆதரவையும் பெற்றிருந்தார்.
இறுதிக்கிரியை
தேரரின் பூதவுடல் இன்று (24.01) வவுனியா விகாரையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட அரச அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, அரச அதிகாரிகள், பாதுகாப்பு தரப்பினர், பௌத்த மதகுருமார் மற்றும் மூவின மக்களும் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அவரது இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.