சீன – இலங்கை நட்புறவின் மையநாளங்கள் எவை? அறுபத்தைந்து ஆண்டுகள் - பிளவடையாத நட்பு சாத்தியமானது எப்படி?

Srilanka China Colombo Gotapaya Mahindha
By Jera Jan 10, 2022 03:12 AM GMT
Report
Courtesy: ஜெரா

சீன - இலங்கை உறவின் 65 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்பட்டுவருகின்றது. இதனைக் கௌரவிக்கும் முகமாக சீன நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இலங்கை வந்திருக்கின்றார்.

ராஜபக்ச குழாமினர் பௌத்த சிங்கள தேசியர்களுக்குரிய நாட்டினை அபிவிருத்தி செய்கிறோம் என்கிற பெயரில், சீனாவுக்கு விற்றுவிட்டனர் என்ற குற்றச்சாட்டுக்கள் தெற்கில் அதிகமாக ஒலிக்கத் தொடங்கியிருக்கின்ற வேளையில் மேற்குறித்த நிகழ்வுகள் இடம்பெறுகின்றமை முக்கியமானது.

அந்தவகையில் சீன - இலங்கை நட்புறவின் வரலாறு குறித்து அறிந்துகொள்வதும், அது எப்படி இலங்கையின் அரசியலைப் பாதித்திருக்கின்றது என்பதையும் அறிந்துகொள்வதற்கான அறிமுகமாக இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

இந்துமா கடலின் கேந்திர நிலையத்தில் இலங்கை அமைந்துள்ளதால் இத்தீவை தரிசிக்காத நாடுகளே இல்லை எனலாம். அந்தளவிற்கு புவிசார் செல்வாக்குடைய முத்தாக இலங்கை இருந்துவருகின்றது.

எனவே உலக வரலாறு தொடங்கிய காலம்தொட்டே பல்வேறு நாடுகளும், நாட்டவர்களும் இலங்கையுடன், அரசியல், பொருளாதார, கலாசார தொடர்புகளைப் பேணிவந்திருக்கின்றனர்.

அந்தப் பின்னணியில் இந்தியாவுக்கு அடுத்த நிலையில் இலங்கையை அதிகம் பாதித்த நாடு எதுவெனப் பார்த்தால், அது சீனாவாகவே இருக்கும்.

சீனாவானது இலங்கையுடன் படையெடுப்பு, அரசியல் உறவுகளைவிட வணிகத் தொடர்பையே அதிகம் பேணியிருக்கின்றது.

கி.பி.411 ஆம் ஆண்டளவில் இலங்கைக்குப் பயணம் செய்த பாகியன் என்ற சீன நாட்டுப் பயணி தொடக்கம், அண்மையில் காலியில் மீட்கப்பட்ட - தமிழ் மொழியில் எழுதப்பட்ட சீன வணிகம் தொடர்பிலான கல்வெட்டு வரை, பண்டைக்காலத்தில் சீனா இலங்கையுடன் கொண்டிருந்த தொடர்புகளை எடுத்துக்காட்டுகின்றது.

1948 ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் இந்நாட்டுடன் சீனா கொண்டுள்ள தொடர்பானது ராஜதந்திர நோக்கிலானது என வகைப்படுத்தப்படுகின்றது. அவ்வாறான இராஜதந்திர தொடர்பானது, இரண்டாம் உலகப் போரின் முடிவிலிருந்து ஆரம்பமாகிறது.

ஐ.நாடுகள் சபையின் உருவாக்கத்தோடு இரண்டுக்கு மேற்பட்ட அணிகளாக உருவாகிய உலக நாடுகளது பட்டியலில் இலங்கையை சீனா ஆதரிப்பதும், சீனாவை இலங்கை ஆதரிப்பதுமாக இந்த நாட்டுப் பட்டியல் இராஜதந்திர தளத்தில் புதுப்பொலிவுடன் ஆரம்பித்திருக்கிறது.

அந்தவகையில் இலங்கைக்குள் முதன்முதலாக தன் நலன்சார்ந்த வணிக நோக்கோடு 1952 ஆம் ஆண்டு சீனா காலடி வைத்தது.

அந்தக் காலப்பகுதிக்கும் தற்போதைய காலப்பகுதிக்கும் பெரியளவு வித்தியாசம் இருக்கவில்லை. இலங்கையில் அரிசிக்குப் பெருந்தட்டுப்பாடு நிலவியது. அக்காலப் பகுதியில் கம்யூனிச நாடாகவிருந்த சீனாவோ, முதலாளிய நாடுகளை மிரட்டும் வகையில் உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

சீனாவின் இறப்பர் பொருட்களுக்குப் பெரும் கிராக்கி இருந்தது. எனவே முதலாளிய நாடுகள் சீனாவிற்கு இறப்பர் விற்பதைத் தடைசெய்ய, சீனாவில் இறப்பர் பஞ்சம் ஏற்பட்டது. இலங்கையில் இறப்பர் செழிக்க, நெல்லரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

எனவே சீனாவுக்கு இறப்பரை கொடுத்து, அரிசியை இறக்குமதி செய்யும் உடன்படிக்கை ஒன்று இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டது. அதனை Rubber-Rice Pact என அழைக்கின்றனர்.

இந்த உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டவரின் பெயர்கூட ரிச்சர்ட் கோட்டபாய சேனநாயக்க என்பதுதான். இதுவேதான் இலங்கை வரலாற்றில் சீனா வணிக உடன்பாடொன்றை முதன்முதலில் ஏற்படுத்திய தருணம். அதனைத் தொடர்ந்து, 1957 ஆம் ஆண்டு சீனாவின் தூதரகம் இலங்கையில் நிறுவப்பட்டது.

1962 ஆம் ஆண்டு இலங்கையை அபிவிருத்தி செய்யும் நோக்குடனான பொருளாதார தொழில்நுட்ப உதவிகளுக்கான உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது.1963 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்குமிடையிலான கடல்சார் உறவு மேம்பாடு பற்றிய உடன்பாடு எட்டப்பட்டது.

1982, 1984 ஆகிய காலப்பகுதிகளில் சீன - இலங்கை உறவுகளில் முக்கியமான காலக்கட்டமாக இருந்தது. இக்காலப் பகுதியில்தான் சீன – இலங்கை நாடுகளுக்கிடையில் இணைந்த வணிக அமைய உடன்படிக்கைகள் உருவாக்கப்பட்டன.

இந்த அமையங்கள் 1991 ஆம் ஆண்டு ஒரே உடன்படிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டு, இலங்கையை அபிவிருத்தி செய்யும் நோக்குடனான கடன்கள், சலுகைகள், போன்றவை அறிமுகம் செய்யப்பட்டன.

2009 ஆம் ஆண்டு இடம் பெற்ற இறுதிப்போருக்கு 2006 ஆண்டில் சீனா பெருந்தொகையான இராணுவ ஊர்திகளையும், மீயொலி விமானங்களையும், விமானிகளுக்கான பயிற்சிகளையும் வழங்கி தன் 65 ஆண்டுகால வரலாற்றை நிரப்பியது.

இதற்கெல்லாம் பிரதியுபகாரமாக இலங்கைக்கு வெளியே இலங்கை சீனாவுக்கான தனது ஆதரவினை வழங்கிவந்திருக்கின்றது.

1971 ஆம் ஆண்டு ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் சீனா இணைத்துக்கொள்ளப்ப்படுவதற்கான வாக்கெடுப்பில் சீனாவுக்கு ஆதரவு வழங்கியதோடு 2001 ஆம் ஆண்டு உலக வணிக கழகத்தில் சீனா இணைந்துகொண்டபோது, அதற்கான ஆதரவையும் இலங்கை வழங்கியது.

இலங்கையில் போர் முடிவுற்றதும் இலங்கை தொடர்பான உறவில் சீனாவினது முகம் மாறியது. உதவிகள் கடன்களாக மாறின.

இந்நாட்டினது உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இலங்கை ஆட்சியாளர்களைவிட சீனா அதிக அக்கறையெடுத்தது. இன்றைக்கு இலங்கையின் குறுக்குமறுக்காக அமைக்கப்பட்டுள்ள வீதிகளில் 90 வீதமானவை சீனாவினால் அமைக்கப்பட்டவை. அதாவது வீதி அமைப்புக்கான பணம் மாத்திரமின்றி, ஆளணி, தொழில்நுட்ப வளம் என அனைத்தையும் சீனாவே அருளியிருக்கிறது.

2010 இல் ஆரம்பித்த சீனாவின் அசுரப் பயணம், அம்பாந்தோட்டை துறைமுகம், மத்தல விமான நிலையம், துறைமுக நகரம், கொழும்பு துறைமுக கிழக்கு முனைய அபிவிருத்தி என வளர்ந்தது.

ராஜபக்ச குழாமினர் மாத்திரமே தம் சிறந்த நண்பர் கூட்டம் என வரைவுவைத்திருக்கும் சீனா, அவர்கள் ஆட்சியிலிருக்கும்போதே இக்கைங்கரியங்களை வேகப்படுத்தி நிறைவேற்றியும் கொள்கிறது.

மக்கள், எதிர்க்கட்சிகள், சிவில் சமூகத்தினர் என இலங்கை வாழ் சமூகங்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்த துறைமுக நகர சட்டத்தை ராஜபக்சவினர் 2019 இல் மீள் வந்தவுடனேயே சீனா நிறைவேற்றிக்கொண்டமையை இதற்கு ஆதரமாகக் கொள்ளலாம்.

ராஜபக்சவினரது காலத்தில் திஸ்ஸமகாராம வாவி அபிவிருத்தி, வடக்கில் அனலைதீவு, நெடுந்தீவு, நாயினாதீவு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படவிருந்த மின்னுற்பத்தி மையங்களுக்கான உடன்படிக்கை ஆகிய இரண்டும் தவிர்ந்து ஏனைய அனைத்துத் திட்டங்களையும் சீனா நடைமுறைப்படுத்தியே வருகின்றது.

ராஜபக்சவினருடனான சீனாவின் உறவு மிகவும் நெருக்கமடைவதற்குப் பல காரணங்கள் உள்ளன.

ராஜபக்சவினர் பௌத்தம் மீது கொண்டிருக்கும் பற்றும், அதன் அரசியலும் சீனாவுக்கும் பொதுவானது. சீனக் குடியரசில் மதத்திற்கு முன்னிலை இல்லை ஆயினும் பௌத்தத் தத்துவத்தைப் பின்பற்றுகின்றனர்.

புத்தரின் போதனைகள், மருத்துவ முறைகள், தியான முறைகள் போன்றன இன்றும் பின்பற்றப்படுகின்றன. இலங்கை அரசியலின் மையசக்தி, சீன தேசத்தின் பண்பாட்டு மையசக்தியாக இருக்கிறது.

எனவே பண்பாட்டடிப்படையில் பௌத்தம் தோன்றிய இந்தியாவை விட சீனாவுடனான தொடர்பு இலங்கைக்கு மிகநெருக்கமானதாக இருக்கின்றது. உலக சனத்தொகையில் பெரும்பான்மையினர் சீனர்கள்தான்.

சீனர்களுக்கே உலகு சொந்தம். அவர்களுக்கு அடுத்துத்தான் அனைத்தும். அதற்காக எதையும் செய்யலாம் என்ற கொள்கையைத்தான் நவீன சீனா நடைமுறைப்படுத்துகின்றது.

கோவிட் அறிமுகம் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. சீனாவில் சிறுபான்மையாக வாழும் உய்குர் முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்படும் இனப்படுகொலையானது இன்றும் நீடித்துக்கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் கண்டனங்கள், எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படுகின்றபோதிலும் அது குறித்து சீனா கண்டுகொள்வதுகூட இல்லை. இங்கேயும் அதுவேதான் நிலைமை. இலங்கையில் பெரும்பான்மையினர் பௌத்த சிங்களவர்களே.

அரசுகூட அவர்களுடையதுதான். பெரும்பான்மைத்துவத்தின் அனைத்து அகங்காரக் கோலங்களையும் இலங்கையில் பார்க்கலாம். அனைத்துத் துறைகளிலும் அனுபவிக்கலாம்.

சிறுபான்மையினரது அரசியல் உரிமைகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் என்னவென்பதை இலங்கை வாழ் மக்கள் அனைவருமே நன்கறிவர். எனவே இரு நாடுகளுக்கும் பொதுவான அரசியல் அம்சமான பெரும்பான்மை மனோநிலையானது நீடித்த நட்பின் வளர்ச்சிக்கு உதவுகின்றது.

சீனா தன் நாட்டில் நடத்தப்படும் மனிதவுரிமை மீறல்கள் குறித்தோ, பேச்சு சுதந்திர மறுப்பு குறித்தோ வெளிப்படையாக எதையும் சொல்வதில்லை. இதுபற்றி முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதில்லை.

இலங்கையிலும் அதுவேதான் நிலமை. இலங்கை சுதந்திரமடைந்த காலம்தொட்டு சிறுபான்மையினர் மீதும், அரசை விமர்சிப்பவர்கள் மீதும் நிகழ்த்தப்படும் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் குறித்து அரசு அக்கறையெடுப்பதில்லை.

குற்றமிழைத்தவர்கள் பெரும்பான்மையினராக இருப்பின் அவர்களுக்குத் தண்டனைகூட அரிதான சம்பவமாக இருக்கிறது. வெளிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதாகக் கூறினாலும், கருத்துச் சுதந்திரத்திற்காகப் பலியெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஐ கடந்துவிட்டது.

உலகின் முதன்மை மனிதவுரிமைகள் காப்பகமான ஐ.நாவின் பாதுகாப்பு சபையில் அங்கத்துவ நாடாக இருக்கின்ற சீனா, ஏனைய நாடுகளில் உள்நாட்டு விவகாரங்களில் ஏனைய நாடுகள் தலையீடு செய்வதை ஒருபோதும் விரும்புவதில்லை.

மனித உரிமைகள் பிரச்சினைகள், தேசிய இனங்களது அரசியல் அபிலாசைகள் பற்றியெல்லாம் அக்கறைப்படுவதில்லை. “அது அவர்களின் பிரச்சினை. அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்” என்ற கொள்கையையே கடைபிடிக்கிறது.

இதன்படி தன் நாட்டுக்குள்ளும் யாரும் நுழைந்து வாலாட்ட முடியாது என்கிறது. இந்தக் கொள்கைதான் இலங்கையினுடையதும்.

ஒவ்வொருமுறை ஐ.நா மனிதவுரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பிக்கும்போதும் “எங்களின் பிரச்சினையை நாங்களே பார்த்துக்கொள்வோம்” பாணியிலான அறிக்கைகளைத் தெற்கு வாசித்துக்கொண்டிருப்பதை அவதானித்திருப்போம். தம்மை ஆளும் அதிகாரம் என்பது இறைவனிடமிருந்து வருவது. அதற்கொரு அதீத சக்தி உண்டு. அந்த சக்தியே நம்மை வழிநடத்தவல்லது.

என்ற கற்பிதங்கள் சீனர்களுக்கும், சீங்களவர்களுக்கும் பொதுவானது. கம்யூனிச வண்ணத்தைப் பூசிக்கொண்டு, ஜனநாயகத்தையும், சர்வாதிகாரத்தையும் சமமாகக் கலந்து மேற்கொள்ளப்படும் இந்த அதீத சக்திகளின் ஆட்சியானது, தம்மைப் பாதுகாக்கும் இரும்புக்கோட்டை என மக்கள் நம்புகின்றனர்.

எல்லாவித அச்சுறுத்தல்களுக்கும் பதில்சொல்ல அவர்கள் ஆட்சியில் இருக்கவேண்டும் என நம்புகின்றனர். இந்த நம்பிக்கையின் வடிவமாக சீனாவில் பிங் வலம் வருகிறார். இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினர் வலம் வருகின்றனர்.

ராஜபக்ச குடும்பத்தினருக்கு சிங்கள மக்கள் வழங்கியிருக்கும் அதீத வலுக்கொண்ட மீட்பர்கள் கௌரவமானது தற்போது, விமர்சனத்திற்குள்ளாகியிருப்பினும், அதனை அவர்கள் கைவிடார்.

ராஜபக்சவினர் இல்லாவிட்டால், இன்னொரு சக்தியில் அதனைப் பிரயோகித்துக்கொள்வர். இந்தக் காரணங்கள்தான் சீன – இலங்கை நட்புறவின் மையநாளங்களாக இருக்கின்றன. இந்த உறவுப் பிணைப்பை இலங்கையுடன் ஒப்பிட்டு வேறெந்த நாட்டுடனும் காணவியலாது.   

கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US