திருகோணமலையில் ஆறு வயது சிறுமி உயிரிழப்பு
திருகோணமலை மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மூச்சு திணறல் காரணமாக ஆறு வயது சிறுமி உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று (05.11.2023) பதிவாகியுள்ளது.
உயிரிழந்த சிறுமி காய்ச்சல் மற்றும் சலி ஏற்பட்ட நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலை அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாட்களாக காய்ச்சல்
உயிரிழந்த சிறுமி திருகோணமலை-அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த தினுகி சத்ஷரணி (06 வயது) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டதாகவும் நெஞ்சில் சலி ஏற்பட்ட நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாளை முன்னெடுக்க உள்ளதாகவும் வைத்தியசாலையில் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவை உலுக்கிய பயங்கரவாத தாக்குதல்! மர்ம நபரிடம் துப்பாக்கியை பறித்த நபர் (காணொளி) News Lankasri