ஆறு வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் - நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
பாலம் அமைக்கப்படும் இடத்திற்கு அருகில் தோண்டப்பட்ட குழியில் விழுந்து ஆறு வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட பாலம் அமைப்பு பணிகளின் மேற்பார்வையாளரான தொழிநுட்ப உதவியாளரை எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் நீதவான் நீதிமன்ற மதுஞ்சலா கேதீஸ்வரன் உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள உன்னிச்சை 6ஆம் கட்டை நெடியமடு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழியொன்றுக்குள் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
சிறுவர் உயிரிழப்பு
6ஆம் கட்டை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் தரம் ஒன்றைச் சேர்ந்த நாகராசா நவதீபன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.

குறித்த பாலம் 6 கட்டைப்பிரதேசத்தில் நீர்ப்பாசனத்திணைக்களத்தினால் பாலம் அடைப்பட்டு அமைக்கப்பட்டு வருகின்றது. இப்பாலத்திலத்திற்கு அருகில் பாரிய குழி தோண்டப்பட்டுள்ளது.
அக்குழியில் நான்கரை அடி நீர் உள்ளது. அக்குழியினை பார்வையிட்ட சிறுவன் கால் சறுகி உள்ளே விழுந்துள்ளார். அதிலிருந்து சற்றுநேரத்தில் சிறுவனின் தயார் சிறுவனைத் தேடிச் சென்ற வேளை குழியிலிருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.
கடும் கண்டனம்
சம்பந்தப்பட்ட திணைக்களத்தினர் தோண்டப்பட்ட குழிகள் உள்ள பிரதேசத்தில் அபாய அடையாளங்கள் எதுவும் இடவில்லையென பொது மக்கள் கவலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாலம் நிர்மாணிக்கும் இடத்தில் அபாய அறிவிப்புக்கள் தொடர்பான பதாகைகள் எதுவும் இடப்படவில்லை என்பதனால் மேற்பார்வையாளர் ஆயித்தியமலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் உள்ள ஏறாவூர்ப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறையில் குறித்த தொழிநுட்ப உதவியாளர் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening