கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பெண்கள் உட்பட அறுவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை தங்கம் மற்றும் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
வரி செலுத்தப்படாத 03 கிலோவுக்கும் அதிகமான தங்கம் மற்றும் 39 ஐபோன் வகை கையடக்கத் தொலைபேசிகள் குற்ற புலனாய்வு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு பெண்கள் உட்பட 06 சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயில் இருந்து வந்தவர்கள்

டுபாயில் இருந்து இன்று அதிகாலை வந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது இந்தப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்தப் பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 45, 48, 50 மற்றும் 51 வயதுடையவர்கள் எனவும், பெண் சந்தேக நபர்கள் 40 மற்றும் 41 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அக்குறணை – நீர்கொழும்பு மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் ஆவர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan
இந்தியா 190 அணு குண்டுகள் வரை உருவாக்கியிருக்கலாம் - விரைவில் பிரித்தானியாவை முந்த வாய்ப்பு News Lankasri