தென் பகுதி கடற்பரப்பில் ஆறு கடற்படையினர் காணாமல் போயுள்ளனர்
சந்தேகத்திற்குரிய படகுகளை சோதனையிடுவதற்காக தென் பகுதி கடற்பரப்பில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஆறு கடற்படையினரும் அவர்கள் சென்ற படகும் காணாமல் போயுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
20 நாட்களுக்கு மேலாக அவர்கள் காணாமல் போயிருப்பதாகவும் அவர்களுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது எனவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.
கடந்த 16 ஆம் திகதி கடற்பரப்பிற்குள் சென்ற படையினர்
ஆறு பேர் கொண்ட இந்த கடற்படை அணி 16 ஆம் திகதி இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக சென்றுள்ளதுடன் கடந்த 17 ஆம் திகதியில் இருந்து அவர்களுடான தொடர்புகள் துண்டிக்கப்பட்டள்ளது.
அவர்களை இதுவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை என கடற்படையினர் கூறியுள்ளனர்.
தேடுதல் நடத்தியும் கடற்படையினரையும் படகையும் கண்டுபிடிக்க முடியவில்லை
தென் பிராந்திய கடற்படை கட்டளை தலைமையகத்தின் கீழ் கடமையாற்றிய கடற்படையினரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். கடற்படையினர், அவர்கள் சென்ற கடற்பரப்பில் தேடுதலில் ஈடுபட்ட போதிலும் அவர்களையும் அவர்கள் சென்ற படகையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
